நமது உடலுக்கு சத்தான உணவுகள் எந்தளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வைட்டமின் D யும் முக்கியம் . வைட்டமின் D குறைபாடு இருந்தால் அன்றாடம் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் . அதாவது 200 மரபணுக்களின் செயல்பாடுகளை வைட்டமின் D தான் கட்டுப்படுத்துகின்றது .
ஆனால்
, அதனை நாம் உட்கொள்ளும் உணவுகளில் உறிஞ்சி எடுக்க வைட்டமின் D போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே
சாத்தியமாகும் . கால்சியம் உறிஞ்சப்படாமல் இருந்தால்தான்
அது செரிமானம் ஆகாமல்
இன்சுலின் சுரப்பை
பாதிப்பதால் நீரிழிவு நோய் உருவாக நேரிடுகின்றது
.
அடுத்து பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும்
காரணம் இல்லாமல் முடி அதிகமாக உதிரும்
. பொதுவாக
முடி உதிர்வதுக்கு பல காரணங்கள் இருக்கிறது
, ஊட்டச்சத்து
குறைபாடு
, ஓர்மோன் குறைப்பாடு இருந்தாலும் முடி உதிரும்.
வைட்டமின்
D குறைப்பாடு இருந்தாலும் அதிகமாக முடி
உதிரும்
. ஆஸ்துமா பிரச்சினைகள் ஏற்படும்
. இதயம் சீராக
இதமாக செயல்பட வைட்டமின்
D அவசியம் .
நமது உலகிலே பணம்
கொடுத்து வாங்காத ஒரு
இயற்கையான
சத்து வைட்டமின்
D ஆகும் . குறைந்தது வாரத்தில் ஐந்து
நாட்கள் காலை
7 மணிமுதல் 9 மணிவரை அல்லது மாலை 4
மணிமுதல்
6 மணிவரை பத்து
முதல் பதினைந்து நிமிடம்
வரை வெயில் நம்
உடலில் படும்படி
நின்றாள் போதும் .
நமது உடல்
வைட்டமின் D யை உருவாக்க ஆரம்பித்து விடும் .
சூரிய ஒளியில் இருந்து வரும் புறவூதாக்கதிர்கள் உடலில்
சருமத்தில் படுகின்றன
, அப்போது சருமத்தில் உள்ள
திசுக்களால் வளர்சத்தை
மாற்றமடைந்து இது உற்பத்தி செய்யப்
படுகின்றது .
அடுத்தது உணவின் மூலமும்
வைட்டமின் D குறைபாட்டை
சரி செய்யலாம்
. தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பதால்
,
நமக்கு
20% வைட்டமின் D கிடைக்கின்றது . சோயா பால்
,
காளான் சூரிய
ஒளியில் வளர்கின்றது என்பதால்
வைட்டமின் D
சத்துக்கு குறைவில்லை
. நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள்
கருவில்
வைட்டமின் D சத்துக்கள் உள்ளது
. ஆரஞ்சு பழம் ,
மீன் அதாவது சால்மன் மீன்
சாப்பிடுவது நல்லது
. ஆய்வு ஒன்று
கூறுவது இந்த மீனை தொடர்ந்து சாப்பிடும் போது எலும்புகளின் அடர்த்தியும் அதிகரிக்கும் . மற்ற மீன்களை விடவும் சால்மன் மீனில் வைட்டமின் D அதிகம் இருக்கிறது . பப்பாளிப்பழம் , கரட் ஆகியவைகளை சேர்த்து சாப்பிடலாம் .
0 Comments