வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுபோகும். இந்தப் பழமொழி நடைமுறை உண்மை.இதுபோல மற்றோரு அனுபவ உண்மை என்னவெனில்,வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும்.
நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெய்யில் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதும் இன்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல்நலத்தைப் பேணிக் காக்கும்.
எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை.
சுத்தமான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, வாயில் விட்டு கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும்.பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை கொப்பளிக்க வேண்டும். பதினைந்து நிமிட நேரத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்து போகும். அப்போது அதை உமிழ்ந்து விடவேண்டும். அதன்பிறகு வாயை நான்கு அல்லது ஐந்து முறை நன்றாக கழுவிச் சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
இந்த எண்ணெயை மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் விடியற்காலை. பல் தேய்த்தபிறகு,காலை உணவு உட்கொள்ளும் முன்பு என்றால் நல்ல பலன் இருக்கும்.
எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும்.ஆனால் ஒன்பது மாதம் முதல் ஓராண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு அனுசரிப்பு நல்லது. ஏனென்றால் அப்படிச் செய்தால், ஓராண்டிற்குள் அனைத்துப் பருவங்களிலும் நேரிடும். மாறுதல்கள் காரணமாக ஏற்படும் நோய்கள்,ஒவ்வாமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
தோலின் மீது வெடிப்புகளும் மாயமாய் மறைந்து தோல் பளபளப்பாகிறது. கால்,கை,விரல்கள் மெருகுற்று இரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரியும்.இத்தகைய மாறுதல்களே உள் உறுப்புகளிலும் ஏற்பட்டு அவை அனைத்தும் முழுநலத்துடன் சிறப்பாக செயல்படும். அதாவது உடலுள் இருக்கும் அனைத்துப் பாகங்களிலும் இரத்த ஓட்டம் சீரடைகிறது. இது முழுநலமுடைய உடலுக்குச் சரியான அறிகுறியாகும்.
0 Comments