நவீன இளம் பெண்கள் ஆண்கள் கல்லூரியிலும் ,அலுவலகத்திலும் அதிகநேரம் இருக்கும் போது அவர்கள் அதிகம் நேரம் உறவாடுவது கம்ப்யூட்டரோடுதான்! அதிலும் ஐ.டீ .நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் திரையைக் கண் கொட்டாமல் பார்க்க வேண்டியுள்ளது .
இதன் விளைவுகள் கண் சோர்வு ,கண்ணின் கீழ் கருவளையம், மனவுளைச்சல் , கண்எரிச்சல் என ஏற்படும் . இது தவிர அதிக அலைச்சலினாலும் , சத்துக்குறைபாடுகளினாலும் , உடல் சூட்டினாலும் , அதிக நேரம் தொலைப்பேசி பயன்படுத்துவதாலும் கண் பிரச்சினைகள் ஏற்படும் .
சிலபேர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ,ஏதோ ஒரு குறை இருப்பது போல் தோன்றும். அது கண்கள்தான் . கண்களின் வசீகரம் குறைந்தால் வயது அதிகமானவர்கள் போல் தோற்றம் காட்டும்.
இப்போதுள்ள டீன்ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்கள் திருமணம் ஆனவர்க்ள கூட கண்கள் சோர்ந்து ஜீவன் இன்றி காணப்படுகிறார்கள் .எந்த பிரச்சினை இருந்தாலும் அதற்கு முழுமையான சிறப்பு சிகிச்சை எடுக்க வேண்டும். ஏனென்றால், அழகான ஆரோக்கியமான கண்களே சிறந்த அழகின் அஸ்திவாரம்.வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு எதாவது ஒரு சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
முதலில் வெளியில் எங்கு சென்று வந்தாலும் முகத்தில் சுத்தமான நீரை கொண்டு நன்கு கழுவவேண்டும். அப்போதுதான் புத்துணர்வு ஏற்படும் .
அதிகநேரம் கண்ணுக்கு வேலை கொடுப்பவர்கள் இளநீர், பன்னீர் சமஅளவு கலந்து பிரிட்ஜில் வைத்துக் குளிர்ந்ததும்.பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்து இருபது நிமிடம் ஓய்வு எடுக்கவும்.
புதினாவை அரைத்து வடிகட்டி அந்த நீரை ஐஸ் வாட்டரில் கலந்து அதை பஞ்சில் தொட்டு கண்களின் மேல் வைத்து அரை நொடி கழித்து எடுக்கவும் இதுபோல பத்து முறை செய்யவும் .
நல்ல தரமான கிரீன் டீத் தூள் டிக்காஷன் எடுத்து அதை குளிரவைத்து ஒரு காட்டன் துணியில் நனைத்து கண்களின் மேல் ஒத்தடம் கொடுக்கவும் . வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றின் சாறை எடுத்து பஞ்சில் தொட்டு பத்து நிமிடம் கண்களின் மேல் வைக்கவும் .தக்காளிச்சாற்றுடன் பன்னீர் சேர்த்து கண்களை சுற்றி தடவவும் .பாதாம்,கசகசா,வெள்ளரி விதை ஆகியவற்றை எடுத்து நைஸாக அரைத்து கண்களின் கருவளையத்தில் தடவிக் காய்ந்தவுடன் மிகவும் லேசான முறையில் கழுவவும் . இதனால் கண்களின் சுருக்கம் நீங்கி கண்கள் பளிச்சிடும்இரவிலில் தூக்கம் எட்டு மணிநேரம் . இரவு தூக்கம் மனிதனின் உயிர்நாடி. அதனால் எந்த குழப்பங்களையும் நினைக்காமல்
மனதை ஒரு நிலைப்படுத்தி தூங்கவும். இரவு தூங்க முடியாதவர்கள் பகலில் நன்றாக தூங்குகள்.
குறிப்பாக தூசி ஏதும் கண்களில் விழுந்தால் கண்களை கசக்காமல் பில்டர் செய்த சுத்தமான நீரை,ஒரு சிறிய தட்டில் ஊற்றி கண்களை அந்த நீரில் விழித்து விழித்து மூடுங்கள்.எந்த வித தூசியும் வெளியே வந்துவிடும். மிகவும் கண் எரிச்சல் அல்லது வலி இருந்தால் உடனே அருகில் இருக்கும் கண் மருத்துவரை அணுகவும் .
இதுதவிர நமது உணவில் அரியவகை சத்துக்கள் அடங்கிய அரைக்கீரை, பொன்னாங்கன்னிக்கீரை,பசளைக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் பீட்ருட், பீன்ஸ், காளான், காலிப்ளவர்,தக்காளி பழவகைகளில்
ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், மாம்பழம், பப்பாளிப்பழம், திராட்ஷை,விளாம்பழம்,பேரீச்சை இவற்றில் கிடைத்தவற்றை உங்கள் உணவில் தினமும் சேர்த்து வந்தால் உங்கள் கண்கள் கவி பாடும் . இயற்கை தந்த அரிய பல மூலிகை சிகிச்சைகளை வைத்து உங்கள் கண்களை மின்ன வையுங்கள்.இதனை முறைப்படி செய்தால் மட்டுமே முழுமையான பலனை அடையலாம் .
0 Comments