இன்றைய காலத்தில் நிறைய பெண்களுக்கு கரு பதிந்து வளர்வதில்
பிரச்சினைகள் உள்ளது . கரு பதிவதில்லை சீக்கிரமாகவே
சிதைவடைகின்றது . என்கின்ற பொழுது அந்த கரு நன்றாக பதிந்து
வளர்வதற்கு நமது உணவு முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் ? நமது
கர்ப்பப்பையில் ஒரு ஆரோக்கியமான குழந்தை வந்து பதிந்து
வளர்வதற்கு , அந்த கரு நல்லபடியாக தன்னுடைய தாயின் இரத்தத்தில்
உள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு , ஆரோக்கியமான குழந்தையாக
வளர்வதற்கு நாம் நல்ல சத்தான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் .
வைட்டமின் C , புரதம் , இரும்புச்சத்து , மினரல்ஸ் ஆகிய நல்ல சத்தான
உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்
.
சாதாரணமாக மாதவிடாய் வந்த 15 நாட்கள் கழித்து , கருமுட்டை
வெளியாகும் . கருமுட்டை வெளியான உடனே 8 மணித்தியாலங்களில்
கருமுட்டையும் , ஆணின் விந்தணுவும் சந்தித்து சேர்ந்து அது
கருமுட்டையில் இருந்து கருவாக மாற ஆரம்பிக்கும் . ஸைக்கோட் எனும்
சொல்லக் கூடிய கருமுட்டை நமக்கு ப்ளொப்பியன் டியூப் அதாவது
சினைப்பை குழாயின் வழியாக பயணிக்க ஆரம்பிக்கும் . அதிலிருந்து 7-8
நாட்களுக்குள் அந்த கருவாக மாறிய , அந்த ஸைக்கோட் வந்து முதல் நாள்
கருமுட்டை வெளியானதில் இருந்து 8 மணித்தியாலத்தில் சேர்ந்து அது
கருவாக மாறிவிடுகிறது . அது மாறி 7 நாள் வரைக்கும் தன்னுள் பல
மாற்றங்களை கொண்டு வருகின்றது . அது ஒரு நிலையை அடையும் . அந்த
மாதிரியான நிலையை அடைந்துக் கொண்டே சினைப்பைய் குழாயில்
இருந்து பயணித்து 8 வது நாளில் கர்ப்பப்பையில் கரு பதிந்து வளர
ஆரம்பிக்கும்
.
அது எப்பொழுது கர்ப்பப்பையில் பதிகின்றதோ அந்த நேரம் வந்து அந்த
கருவை ஏற்றுக் கொள்ள , முழுமையான தகுதியோடு அந்த
என்றோமெட்டிரியல் லைனிங் வந்து தயாராக இருக்கும் . அது சென்று
பதிந்து 8 நாள் வளர ஆரம்பிக்கும் பொழுதுதான் நமக்கு அதிலிருந்து கரு
வந்து தாயின் உடைய இரத்தத்தில் இருந்து சத்துக்களை எடுத்துக்
கொண்டு வளர ஆரம்பிக்கும் . அந்த நிலையில் தான் நீங்கள் யூரின் டெஸ்ட்
HCG எடுத்து கர்ப்பம் அடைந்து உள்ளீர்களா என்பதை நாம் தெரிந்துக்
கொள்ள முடியும் . அதாவது இவ்வளவு நிகழ்வுகளை கடந்துத்தான் அந்தக்
கரு பதிந்து வளர்வது உள்ளது
.
கரு உருவாக வேண்டும் . உருவாகிய அந்தக் கரு தன்னுள் பல மாற்றங்கள்
அடைந்து , ப்ளஸ்ட்ரோ சிஷ்டா ஆக மாற வேண்டும் . அது சினைப்பை
குழாய் வழியாக பயணித்து வந்து , நமக்கு கருப்பையில் பதிந்து வளர
வேண்டும் . அந்தக் கருப்பையில் பதிந்த பிறகு தாயின் உடைய
சத்துக்களை இரத்தத்தின் ஊடக எடுத்துக் கொண்டு கரு வளர
ஆரம்பிக்கும் . இவ்வளவு விடயங்கள் நடக்க நமது உடலுக்கு நிறைய
சத்துக்கள் தேவைப்படும் . அதற்குறிய சிறந்த உணவு முறைகளை
கடைபிடிப்பது சிறந்தது
.
0 Comments